மேஷம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

மேஷம் ராசிக்கு 2025 சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்?: பலன்களும் பரிகாரமும்!

Mar 27, 2025 - 16:20
 0  5
மேஷம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

மேஷம்: வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் உறங்க மாட்டீர்கள். எல்லோரையும் எளிதில் நம்பும் நீங்கள் எதிலும் அமைதியை விரும்புவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இப்போது ராசிக்கு 12-ல் சென்று மறைவதால் தடைபட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடித்துக் காட்டுவீர்கள்.

ஏழரைச் சனி தொடங்குகிறதே என்று பதற வேண்டாம். தற்சமயம் விரய வீட்டில் வந்து அமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow