ரிஷபம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

ரிஷபம் ராசிக்கு  2025 சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும்?: பலன்களும் பரிகாரமும்!

Mar 27, 2025 - 16:20
 0  4
ரிஷபம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

ரிஷபம்: எங்கும் எதிலும் முதலிடத்தைப் பிடிக்க நினைக்கும் நீங்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பீர்கள். உங்களை சீண்டினால், எரிமலையாய் பொங்கி எழுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்சினைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள்.

உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி கிட்டும். இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். குழந்தை வரம் கிட்டும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். சகோதரர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow