மேஷம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025
மன நிறைவைத் தரும்: மேஷம் ராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள் - 2025

மேஷம்: சதா சர்வ காலமும் உழைத்துக் கொண்டே இருக்கும் நீங்கள் அடிமனதில் ஒன்றை குறி வைத்துவிட்டால் அதை அடையாமல் விடமாட்டீங்கள். உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) மே 14 முதல் 3-ம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான். தனது பார்வை அருளால் நல்ல மாற்றங்களைத் தரப்போகிறார். இதுவரை உங்களின் மனதில் இருந்த குழப்பங்கள், தயக்கம் அனைத்தும் நீங்கி தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். எனினும், குருபகவான் முயற்சி ஸ்தானத்தில் அடியெடுத்து வைப்பதால், நீங்கள் முன்னெடுக்கும் காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் வந்து போகத்தான் செய்யும்.
குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. எந்தவொரு திட்டமாக இருந்தாலும், இரண்டாவதாக ஒரு யோசனையை வைத்துக் கொள்ளுங்கள். முதல் யோசனை சறுக்கினாலும், இரண்டாவது கைகொடுக்கும்.
What's Your Reaction?