மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.

மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். முன்கோபம் விலகும். உத்தியோகம் சிறக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும்.
ரிஷபம் : குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்று நட்பை புதுப்பிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
What's Your Reaction?