மேற்கூரை சூரிய ஒளி திட்டத்துக்கு மானியம் வழங்க நடவடிக்கை: கோவையில் அமைச்சர் தகவல்

கோவையில் நடந்த வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியில் 43 குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து, 1.36 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.115 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரம்) கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகின.

Nov 11, 2024 - 15:59
 0  5
மேற்கூரை சூரிய ஒளி திட்டத்துக்கு மானியம் வழங்க நடவடிக்கை: கோவையில் அமைச்சர் தகவல்

கோவை: கோவையில் நடந்த வாங்குவோர், விற்போர் சந்திப்பு நிகழ்ச்சியில் 43 குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து, 1.36 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.115 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரம்) கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகின. முதலீட்டு மானியம் விரைந்து வழங்கவும், மேற்கூரை சூரிய ஒளி திட்டத்துக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்காக தமிழக அரசு சார்பில் கடந்த இரண்டு நாட்கள் கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற வாங்குவோர்- விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது.இதற்கு தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow