அதிக நன்கொடை வழங்கியோரில் ஷிவ் நாடார் முதலிடம்
இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கியோரில் எச்சிஎல் நிறுவனர் சிவ நாடார் (79) முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கியோரில் எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் (79) முதலிடத்தை பிடித்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த ஹு ரன் என்ற நிறுவனம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் சமூக நலத் தொண்டுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய தொழிலதிபர்கள் வழங்கும் நன்கொடை குறித்து ஹு ரன் நிறுவனம் ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. இதன்படி 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்டியலை அந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதில் இந்தியாவை சேர்ந்த 203 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.
What's Your Reaction?