மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமான வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழா இன்று (ஜூலை 29) கோலாகலமாக நடைபெற்றது.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமான வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழா இன்று (ஜூலை 29) கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும் குண்டம் திருவிழா இவ்வாண்டு கடந்த 22-ம் தேதி பூச்சாற்றுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள் தினமும் நடத்தப்பட்டு வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று (ஜூலை 29) நடைபெற்றது.
What's Your Reaction?