‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்து இணையத்தில் பரவும் வதந்தி: குஷ்பு விளக்கம்
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கஸண்ட்ரா, மீனா உட்பட பலர் நடிக்கும் படம், ‘மூக்குத்தி அம்மன் 2’.

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கஸண்ட்ரா, மீனா உட்பட பலர் நடிக்கும் படம், ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் இயக்குநர் சுந்தர்.சி-க்கும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரச்சினை ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இதை மறுத்து நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மூக்குத்தி அம்மன் 2 பற்றி பல தேவையற்ற வதந்திகள் இணையத்தில் உலவி வருகின்றன. அது உண்மையில்லை. படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?