பாடல் இல்லாத படம் ‘சரண்டர்’

தர்ஷன், பாடினி குமார், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூரலிகான் என பலர் நடித்துள்ள படம் ‘சரண்டர்’. விகாஸ் படிஸா இசை அமைத்துள்ளார்.

Jul 26, 2025 - 08:20
 0  2
பாடல் இல்லாத படம் ‘சரண்டர்’

தர்ஷன், பாடினி குமார், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூரலிகான் என பலர் நடித்துள்ள படம் ‘சரண்டர்’. விகாஸ் படிஸா இசை அமைத்துள்ளார். அப்பீட் பிக்சர் சார்பாக விஆர்வி குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கவுதமன் கணபதி இயக்கியுள்ளார். ஆக.1-ம் தேதி வெளியாக இருக்கும் இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் கவுதமன் கணபதி பேசும்போது, “ இந்தப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை. வேண்டும் என்றே வைக்கவில்லை என்று கூற முடியாது. தேவைப்படவில்லை. கதாநாயகனாக நடித்துள்ள தர்ஷனும் எனக்கு இது மாதிரி வேண்டும் என எதையுமே கேட்கவில்லை. இதில்பணியாற்றியுள்ள கேமராமேன், எடிட்டர், இசை என எல்லோருமே எனது குரு அறிவழகனிடமிருந்து வந்தவர்கள் தான். ஒரு டீமாக உழைத்துள்ளோம். படம் நேர்த்தியாக வந்துள்ளது' என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow