பான் - இந்தியா படங்கள் மிகப்பெரிய மோசடி: அனுராக் காஷ்யப் விமர்சனம்

இந்தி இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். ‘மகாராஜா’ படத்தில் அவர் நடிப்பு பேசப்பட்டது

May 13, 2025 - 07:00
 0  4
பான் - இந்தியா படங்கள் மிகப்பெரிய மோசடி: அனுராக் காஷ்யப் விமர்சனம்

இந்தி இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். ‘மகாராஜா’ படத்தில் அவர் நடிப்பு பேசப்பட்டது. அவர், 'தி இந்து' நாளிதழ் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும்போது, பான் இந்தியா திரைப்படங்கள் மிகப்பெரிய மோசடி என்று விமர்சித்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “பான்-இந்தியா' என்ற சொல் ஒரே நேரத்தில் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களைக் குறிக்கிறது. ‘பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த போக்கு அதிகரித்துவிட்டது. அடுத்து, ‘கேஜிஎஃப்', ‘புஷ்பா' போன்ற படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றி, பான் இந்தியா விநியோகத்தை மேலும் அதிகரித்தன. இது இன்னும் அதிகரிக்கும். ஒரு, பான் இந்தியா திரைப்படம் 3 முதல் 4 வருடங்கள் தயாரிக்கப்படுகின்றன. பல பேர் அந்தப் படத்தை நம்பி வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறையும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் படத்தைச் சார்ந்தே இருக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow