‘பிரேமலு 2’ படம் ட்ராப் ஆவது உறுதி!
‘பிரேமலு’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட படம் ‘பிரேமலு 2’. இதன் படப்பிடிப்பு ஜூனில் தொடங்கி, படத்தினை டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டது.

‘பிரேமலு’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட படம் ‘பிரேமலு 2’. இதன் படப்பிடிப்பு ஜூனில் தொடங்கி, படத்தினை டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், எந்தவொரு அறிவிப்புமே இன்றி, படப்பிடிப்பும் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது ‘பிரேமலு 2’ படம் கைவிடப்பட்டது உறுதியாகி இருக்கிறது.
‘பிரேமலு’ படத்தின் இணை தயாரிப்பாளரான திலீஷ் போத்தன், ‘பிரேமலு 2’ படத்தின் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார். மீண்டும் எப்போது தொடங்கும் என்ற தகவலையும் திலீஷ் போத்தன் தெரிவிக்கவில்லை. இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
What's Your Reaction?