முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் பம்ப்செட் விற்பனை பாதிப்பு

இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பம்ப்செட் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கமாக மிக அதிக வியாபாரம் நடக்கும் மே மாதம் மந்த நிலையில் காணப்படுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

May 29, 2025 - 22:10
 0  3
முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் பம்ப்செட் விற்பனை பாதிப்பு

கோவை: இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பம்ப்செட் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கமாக மிக அதிக வியாபாரம் நடக்கும் மே மாதம் மந்த நிலையில் காணப்படுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பம்ப்செட் தேவையை பூர்த்தி செய்வதில் கோவை மாவட்டத்தில் உள்ள பம்ப்செட் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. வழக்கமாக கோடை காலத்தில் பம்ப்செட் தேவை அதிகம் காணப்படும் நிலையில், இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய காரணத்தால் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow