இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்

அமெரிக்க வேளாண் விளைபொருட்​கள், பால் பொருட்​களுக்​கான சந்​தையை திறக்க வேண்​டும் என்ற அமெரிக்​கா​வின் கோரிக்​கையை இந்​தியா ஏற்​க​வில்​லை. இதனால் உடன்​பாடு ஏற்​படு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டது. 

Sep 16, 2025 - 09:00
 0  2
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்

புதுடெல்லி: இந்​தி​யா, அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வது தொடர்​பாக 5 சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. ஆனால், அமெரிக்க வேளாண் விளைபொருட்​கள், பால் பொருட்​களுக்​கான சந்​தையை திறக்க வேண்​டும் என்ற அமெரிக்​கா​வின் கோரிக்​கையை இந்​தியா ஏற்​க​வில்​லை. இதனால் உடன்​பாடு ஏற்​படு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டது.

இதற்கு நடு​வே, இந்​திய பொருட்​கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25% வரி விதித்​தார். அத்​துடன் ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தாகக் கூறி வேறு எந்த நாட்​டுக்​கும் இல்​லாத வகை​யில் கூடு​தலாக 25 சதவீதம் வரி விதித்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow