மிராய்: திரைப் பார்வை - கைவிடப்பட்டவனுக்கு காத்திருக்கும் வேலை!

கலிங்கத்துப் போரில் வெற்றிபெற்ற மாமன்னர் அசோகர், தனது சக்திகளை ஒன்பது ரகசியப்  புத்தகங்களில் ஒளித்து வைக்கிறார். அவை உலகின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாக்கப்படுகின்றன.

Sep 19, 2025 - 21:30
 0  2
மிராய்: திரைப் பார்வை - கைவிடப்பட்டவனுக்கு காத்திருக்கும் வேலை!

கலிங்கத்துப் போரில் வெற்றிபெற்ற மாமன்னர் அசோகர், தனது சக்திகளை ஒன்பது ரகசியப் புத்தகங்களில் ஒளித்து வைக்கிறார். அவை உலகின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாக்கப்படுகின்றன. சில யுகங்கள் கடந்து, அந்தப் புத்தகங்களைக் கைப்பற்றிச் சாகாவரம் பெறத் துடிக்கிறார் தீயசக்தியான மஹாபீர் லாமா. ஒன்பதாவது புத்தகத்தை வைத்திருக்கும் யோகினியான அம்பிகா, அகத்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி, தன்னுடைய மகன் வேதாவை (தேஜா சஜ்ஜா) வாராணசியில் கைவிடுகிறார்.

அவன் அங்கேயே வளர்ந்து 24 வயதை எட்டும்போது, அவன் யார் என்பதையும் அவனுக்கு இந்த உலகில் கொடுக்கப்பட்ட வேலை என்ன என்பதையும் திரையில் பிரம்மாண்டமாய் விரிக்கிறது கதை. அதுவும் ‘லைவ் ஆக்‌ஷன் - 3டி அனிமேஷன்’ கலந்த காவியத் திரைக்கதை அமைப்பு. அதற்கான காட்சியமைப்புகள் பிரம்மாண்டத் திரை அனுபவமாக நம்மை இருக்கையிலேயே அமரவைத்து அசரடிக்கிறது, தமிழிலும் வெளியாகியிருக்கும் இந்த அக்கட தேசத்தின் ‘மிராய்’.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow