மியான்மரில் ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் உயிரிழப்பு

மியான்​மரில் மக்​களால் தேர்ந்​ தெடுக்​கப்​பட்ட ஆட்​சியை விரட்டி விட்​டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்​பற்​றியது.

Oct 9, 2025 - 03:25
 0  4
மியான்மரில் ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் உயிரிழப்பு

யாங்கூன்: மியான்​மரில் மக்​களால் தேர்ந்​ தெடுக்​கப்​பட்ட ஆட்​சியை விரட்டி விட்​டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்​பற்​றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சி​யாளர்​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்றனர். அவர்​களை ஒடுக்க ராணுவ​மும் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில், பவுர்​ணமியை முன்​னிட்டு கடந்த திங்​கட்​கிழமை மத்​திய மியான்​மரில் உள்ள சவுங் யூ நகரில் புத்த மதத்​தினர் ஏராள​மானோர் கூடி விழா கொண்​டாடினர். அப்​போது புத்த மதத்​தினர் கூடி​யிருந்த பகு​திகளில் ராணுவத்​தினர் பாராகிளைடர் மூலம் அடுத்​தடுத்து குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்​தினர். இதில் குழந்​தைகள் உட்பட 40 பேர் உயி​ரிழந்​தனர். 80 பேர் படு​கா​யம் அடைந்​தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow