ஒரே நாளில் ரூ.1,480 அதிகரிப்பு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91,000 தாண்டியது
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன்பிறகு, சில நாட்கள் விலை குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் கண்டு வந்தது. கடந்த 7-ம் தேதி பவுன் விலை ரூ.89 ஆயிரத்தை தாண்டியது.
What's Your Reaction?