மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 11 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரிப்பு - அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

இந்தியாவின் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த 11 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

Jul 19, 2025 - 14:55
 0  3
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 11 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரிப்பு - அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

ஹைதராபாத்: இந்தியாவின் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த 11 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஐஐடி ஹைதராபாத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய மத்திய ரயில்வே, தகவல் ஒளிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் வைஷ்ணவ், இந்தியாவில் மின்னணு பொருட்களின் உற்பத்தியும் ஏற்றுமதியும் மிகச் சிறப்பாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி 6 மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல், ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இந்தியாவுக்கு இணையான நாடுகள் கண்டிராத வளர்ச்சி இது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow