‘ஜிஎஸ்டி வரி எப்போது ஒரே விகிதமாக மாறும்?’ - நிர்மலா சீதாராமன் விவரிப்பு
“4 ஆக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதங்களை 2 ஆக குறைத்துள்ளோம்; அவற்றையும் ஒன்றாக மாற்றுவோம்” என மதுரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

மதுரை: “4 ஆக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதங்களை 2 ஆக குறைத்துள்ளோம்; அவற்றையும் ஒன்றாக மாற்றுவோம்” என மதுரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
மதுரையில் இன்று தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழா அதன் தலைவர் வேல்சங்கர் தலைமையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெற்றது. கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறந்த தொழிலதிபர்களுக்கு விருதுகள் வழங்கியும், சங்கத்தின் 80-வது ஆண்டு மலரையும் வெளியிட்டு பேசினார்.
What's Your Reaction?