‘மிகப் பெரிய தவறு செய்துவிட்டீர்கள்; தண்டனை தொடரும்’ - இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Jun 23, 2025 - 11:15
 0  4
‘மிகப் பெரிய தவறு செய்துவிட்டீர்கள்; தண்டனை தொடரும்’ - இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான்: ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் ஈரான் நாட்டின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கமேனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “எங்களது ஸயோனிஸ்ட் எதிரிகள் மிகப்பெரிய தவறிழைத்து விட்டார்கள். பெரும் குற்றம் புரிந்துள்ளார்கள். இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டிய நாடு. தண்டனை தொடர்கிறது.” என்று பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த எச்சரிக்கைப் பதிவில் அமெரிக்காவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow