மாலையில் மீண்டும் உயர்வு: ரூ.92,000-ஐ எட்டியது தங்கம் விலை!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.11) காலையில் ரூ.680 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.600 உயர்ந்து பவுன் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது, புதிய வரலாற்று உச்சமாக கருதப்படுகிறது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.11) காலையில் ரூ.680 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.600 உயர்ந்து பவுன் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது, புதிய வரலாற்று உச்சமாக கருதப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. அதாவது காலை, மாலை என இரு வேளைகளும் மாற்றமடைந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
What's Your Reaction?