போராடினால் மறக்க முடியாத தொடராக இருக்கும்: இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் கம்பீர் எழுச்சி உரை

ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​கு​கிறது.

Jun 13, 2025 - 08:10
 0  4
போராடினால் மறக்க முடியாத தொடராக இருக்கும்: இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் கம்பீர் எழுச்சி உரை

பெக்கன்ஹாம்: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​கு​கிறது. இதற்​காக இந்​திய அணி வீரர்​கள் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இதன் ஒரு கட்​ட​மாக இந்​தியா ஏ, இந்​தியா அணி​கள் மோதும் பயிற்சி ஆட்​டம் பெக்​கர்​ஹாமில் இன்று தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில், இந்​திய அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் வீரர்​கள் மத்​தி​யில் உரை​யாடு​வதை பிசிசிஐ தனது இணை​யதளத்​தில் வீடியோ​வாக வெளி​யிட்​டுள்​ளது. அதில் கவுதம் கம்​பீர் கூறும்​போது, “இந்த சுற்​றுப்​பயணத்தை இரண்டு வித​மாகப் பார்க்​கலாம். ஒன்​று, மிக​வும் அனுபவம் வாய்ந்த எங்​களது 3 வீரர்​கள் (ரோஹித் சர்​மா, விராட் கோலி, ரவிச்​சந்​திரன் அஸ்​வின்) ஆகியோர் இல்​லாமல் இருக்​கிறோம் அல்​லது நாட்​டிற்​காக ஏதாவது சிறப்​பாகச் செய்ய இந்த அற்​புத​மான வாய்ப்​பைப் பெற்​றுள்​ளோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow