சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த விருப்பம் தெரிவித்து கடிதம் வழங்கியது இந்தியா
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் 'விருப்பக் கடிதத்தை' சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்கால போட்டியை நடத்தும் உரிமையை வழங்கும் கமிஷனிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது.

புதுடெல்லி: 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் 'விருப்பக் கடிதத்தை' சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்கால போட்டியை நடத்தும் உரிமையை வழங்கும் கமிஷனிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடனான பல மாத முறைசாரா உரையாடலுக்குப் பிறகு ஒரு லட்சிய திட்டத்தில் முதல் உறுதியான நடவடிக்கையை இந்திய ஒலிம்பிக் சங்கம் எடுத்துள்ளது.
இந்த கடிதத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) கடந்த அக்டோபர் 1-ம்தேதி சமர்ப்பித்ததாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
What's Your Reaction?