3-வது டி20 ஆட்டத்தில் இன்று மோதல்: பதிலடி தரும் முனைப்பில் இந்திய அணி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் நகரில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

செஞ்சூரியன்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் நகரில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. டர்பன் நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து கெபர்ஹாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுத்தது. 125 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
What's Your Reaction?