‘பொதுமக்களை கொன்றுவிட்டு தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது’ - சசி தரூர்
பொதுமக்களை கொன்றுவிட்டு, பிறகு தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி: பொதுமக்களை கொன்றுவிட்டு, பிறகு தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. 4 நாட்களாக நடைபெற்ற போர் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுடன் தொடர்புடைய நாடுகளிடம் தெரிவிக்க அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்பியது.
What's Your Reaction?