“பெண்களே சமுதாயத்தின் முதுகெலும்பு” - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்
உண்மையில் பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு, என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

சென்னை: “ஒரு மகளே தந்தையை வழிநடத்துபவர், ஒரு சகோதரி சகோதரனை வழிநடத்துபவர், ஒரு தாயே குழந்தைக்கு முதல் ஆசிரியர். எனவே, ஒவ்வொரு பெண்ணும் ஒரு குருவே.பெண்கள் செய்யும் வேலைகளை பட்டியலிடுவது மிகவும் கடினம். அவர்களால் செய்ய இயலாத வேலைகளை பட்டியலிடுவதே சுலபம். உண்மையில் பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு,” என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்திய கலாச்சாரத்தில், பெண்கள் அதிகாரமடைய வேண்டும் என்ற கொள்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வருகிறது. நம்முடைய புராணங்களை பாருங்கள். பெண்களுக்கு எப்போதுமே முக்கியமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது. தேவி புராணம் மற்றும் தேவி பகவதத்தில் இது அழகாக விவரிக்கப்படுகிறது. பாதுகாப்புக்காக துர்கா, பொருளாதாரத்துக்காக லக்ஷ்மி, கல்விக்காக சரஸ்வதி.
What's Your Reaction?