பூமி அழியுமா? | டிங்குவிடம் கேளுங்கள்

பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள். இன்னும் 500 கோடி ஆண்டுகள் வரை பூமி இருக்கும். ஆனால், பூமியில் வாழும் உயிரினங்கள் ஏதாவது சிறுகோள் மோதி அழியலாம். சுற்றுச்சூழல் மாசு காரணமாக வாழத் தகுதியற்ற கோளாக பூமி மாறலாம்.

Nov 20, 2024 - 13:05
 0  5
பூமி அழியுமா? | டிங்குவிடம் கேளுங்கள்

பூமி அழிவதற்கு வாய்ப்பு உள்ளதா, டிங்கு? - விடிஷா, 5-ம் வகுப்பு, ஆக்ஸாலிஸ் சர்வதேசப் பள்ளி, கள்ளக்குறிச்சி.

பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள். இன்னும் 500 கோடி ஆண்டுகள் வரை பூமி இருக்கும். ஆனால், பூமியில் வாழும் உயிரினங்கள் ஏதாவது சிறுகோள் மோதி அழியலாம். சுற்றுச்சூழல் மாசு காரணமாக வாழத் தகுதியற்ற கோளாக பூமி மாறலாம். 500 கோடி ஆண்டுகளுக்குப் பின் பூமி சூரியனால் விழுங்கப்படுவதற்கு முன்பே, வெப்பம் அதிகரித்து பூமியின் நீர்நிலைகள் வற்றிவிடலாம். அதாவது பூமி அழிவதற்கு முன்பே உயிரினங்கள் அழியலாம். ஆனால், இவை எல்லாம் உடனே நடக்காது என்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, விடிஷா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow