பூக்களின் வேலைநிறுத்தம்... | கதை
அழகான காடு. அந்தக் காட்டின் நடுவே ஒரு பூந்தோட்டம் இருந்தது. செடிகளிலும் கொடிகளிலும் ஏராளமான பெரிய மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த நறுமணம் காடு முழுவதும் வீசியது.

அழகான காடு. அந்தக் காட்டின் நடுவே ஒரு பூந்தோட்டம் இருந்தது. செடிகளிலும் கொடிகளிலும் ஏராளமான பெரிய மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த நறுமணம் காடு முழுவதும் வீசியது. காட்டில் உள்ள தேனீக்கள், வண்டுகள், சிறு பறவைகள்,வண்ணத்துப்பூச்சிகள் எல்லாம் பூந்தோட்டத்தை நோக்கி வர ஆரம்பித்தன. ஒரே இடத்தில் ஏராளமான பூக்கள். அத்தனை பூக்களிலும் தேன்.
காட்டின் நடுவே பூந்தோட்டம் இருந்ததால் எந்த ஆபத்தும் நிகழ வாய்ப்பில்லை என்பதால் அச்சமின்றி பூந்தேனைக் குடிக்கலாம். எனவே நாளுக்கு நாள் பூந்தோட்டத்துக்குள் நுழையும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் வந்த உயிரினங்கள் எல்லாம் பூந்தோட்டத்திலேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்துவிட்டன.
What's Your Reaction?