‘புஷ்பா 2’ நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்: அல்லு அர்ஜுன் அறிவிப்பு 

‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார். 

Dec 7, 2024 - 19:10
 0  4
‘புஷ்பா 2’ நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்: அல்லு அர்ஜுன் அறிவிப்பு 

ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில். “புஷ்பா 2 பிரீமியர் நிகழ்ச்சியின்போது இதயத்தை நொறுக்கும் ஒரு நிகழ்வு நடக்கும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ரேவதி என்பவர் உயிரிழந்ததை அறிந்து வருத்தமடைந்தேன். திரைப்படங்களுக்குச் செல்வது நம் அனைவருக்கும் பிடித்தமான அனுபவம், ஆனால் இப்படியான சம்பவம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow