அடிலெய்டு டெஸ்ட் 2-வது நாள்: ஆஸி.க்கு எதிராக தடுமாறும் இந்திய அணி 128/5

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 128 ரன்களை சேர்த்துள்ளது. 

Dec 7, 2024 - 18:45
 0  5
அடிலெய்டு டெஸ்ட் 2-வது நாள்: ஆஸி.க்கு எதிராக தடுமாறும் இந்திய அணி 128/5

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் 128 ரன்களை சேர்த்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் வெள்ளிக்கிழமை (டிச.6) தொடங்கியது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 337 ரன்களை குவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow