2 நாட்களில் ரூ.449 கோடியை அள்ளிய அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ 

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.449 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Dec 7, 2024 - 18:00
 0  6
2 நாட்களில் ரூ.449 கோடியை அள்ளிய அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ 

ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.449 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தப் படம் இந்தி வெர்ஷனில் மட்டும் படம் ரூ.100 கோடியை எட்டி ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. முன்னதாக, வெளியான ‘புஷ்பா’ முதல் பாகமும் இந்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை வசூல் பெரிய அளவில் இல்லை. கிட்டதட்ட ரூ.25 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானா, இந்தி பேசும் மாநிலங்களின் வசூல் அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow