“ஓர் உணர்வுப்பூர்வ பயணம்...” - ‘மாமன்’ வெற்றியால் சூரி நெகிழ்ச்சி

‘மாமன்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால் மிகவும் நெகிழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் சூரி. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாமன்’. இப்படத்தின் கதையை சூரிதான் கொடுத்துள்ளார்.

May 26, 2025 - 19:55
 0  4
“ஓர் உணர்வுப்பூர்வ பயணம்...” - ‘மாமன்’ வெற்றியால் சூரி நெகிழ்ச்சி

‘மாமன்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால் மிகவும் நெகிழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் சூரி. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாமன்’. இப்படத்தின் கதையை சூரிதான் கொடுத்துள்ளார். இப்படம் தமிழகத்தில் ரூ.25 கோடி வசூலை கடந்திருக்கிறது. இந்த வரவேற்பை முன்னிட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சூரி.

அந்தப் பதிவில் சூரி, “உண்மையான வெற்றி என்றால்… உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மனதார மதிப்புக் கொடுப்பதில்தான் ஆரம்பமாகிறது. அந்த நம்பிக்கையோடு ‘மாமன்’ கதையை நான் தொடங்கினேன். ‘மாமன்’ என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவிய, ஆனால் நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் ஓர் உணர்வுப்பூர்வமான பயணம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow