புறாக்களின் மொழி | உயிரினங்களின் மொழி - 23

ஒரு புறா பறக்கும்போது திடீரெனத் திசைமாற்றம் செய்தால், மற்ற புறாக்கள் அச்சத்தை உணர்ந்து, அதன் திசையில் பறக்கத் தொடங்கும். இதுவே புறாக்களின் ’பறக்கும் மொழி’.  இதன் மூலம் அபாயங்களைத் தவிர்க்கவும் குழுவாகச் செயல்படவும் புறாக்கள் பழகியிருக்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் இரண்டு புறாக்கள் எதிரெதிராக நின்று, அவற்றின் அலகுகளைத் தட்டி ஒரு தனித்துவமான ஒலியை எழுப்பும். இதன் மூலம் மற்ற புறாக்கள், காதல் புறாக்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்.

Jun 14, 2025 - 17:20
 0  3
புறாக்களின் மொழி | உயிரினங்களின் மொழி - 23

மனிதர்கள் ஆரம்பக் காலத்திலிருந்தே செய்தியைப் பரிமாறிக் கொள்ளப் புறாக்களைப் பயன்படுத்தினார்கள். முதல் உலகப் போரில் Cher Ami என்கிற ஆண் புறா 25 மைல் தூரத்தைக் கிட்டத்தட்ட 25 நிமிடங்களில் கடந்து, ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டு சென்றதன் மூலம், ’Lost Battalion’ என்று அறியப்பட்ட ஒரு படைப்பிரிவையே காப்பாற்றியது. அஞ்சல் பறவைகள் என்று அழைக்கப்படும் இவை தங்களுக்குள் தொடர்புகொள்ளத் தனித்துவமான வழிகளை வைத்துள்ளன. ஒலி, உடல் மொழி, பறக்கும் விதம் போன்றவற்றை இதற்காகப் பயன்படுத்துகின்றன.

புறா என்றால் அதன் ’கூ.. கொ... கொக்..’ என்கிற கூவல்தான் நினைவுக்கு வரும். ஆனால், அந்தக் கூவலின் தன்மை, அளவு, தொடர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடும். மெல்லிய ’குறுகுறு’ ஒலிகள் அவற்றின் உணர்வுகளை, தேவைகளை மற்ற புறாக்களுக்குத் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஆண் புறா தன் துணையை ஈர்க்க, குறுகுறு சத்தத்துடன், உடல் மொழியையும் இணைத்துச் செயல்படுத்தும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow