புறாக்களின் மொழி

ஒரு புறா பறக்கும்போது திடீரெனத் திசைமாற்றம் செய்தால், மற்ற புறாக்கள் அச்சத்தை உணர்ந்து, அதன் திசையில் பறக்கத் தொடங்கும். இதுவே புறாக்களின் ’பறக்கும் மொழி’.  இதன் மூலம் அபாயங்களைத் தவிர்க்கவும் குழுவாகச் செயல்படவும் புறாக்கள் பழகியிருக்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் இரண்டு புறாக்கள் எதிரெதிராக நின்று, அவற்றின் அலகுகளைத் தட்டி ஒரு தனித்துவமான ஒலியை எழுப்பும். இதன் மூலம் மற்ற புறாக்கள், காதல் புறாக்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்.

Jun 13, 2025 - 13:20
 0  5
புறாக்களின் மொழி

உயிரினங்களின் மொழி - 23

மனிதர்கள் ஆரம்பக் காலத்திலிருந்தே செய்தியைப் பரிமாறிக் கொள்ளப் புறாக்களைப் பயன்படுத்தினார்கள். முதல் உலகப் போரில் Cher Ami என்கிற ஆண் புறா 25 மைல் தூரத்தைக் கிட்டத்தட்ட 25 நிமிடங்களில் கடந்து, ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டு சென்றதன் மூலம், ’Lost Battalion’ என்று அறியப்பட்ட ஒரு படைப்பிரிவையே காப்பாற்றியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow