பின்வாங்கிய ‘விடாமுயற்சி’யால் பொங்கலுக்கு அணிவகுக்கும் படங்கள்!

பொங்கல் வெளியீட்டில் இருந்து ‘விடாமுயற்சி’ பின்வாங்கியதை தொடர்ந்து, பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்து வருகின்றன.

Jan 2, 2025 - 17:35
 0  5
பின்வாங்கிய ‘விடாமுயற்சி’யால் பொங்கலுக்கு அணிவகுக்கும் படங்கள்!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ சில பிரச்சினைகளால் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கிவிட்டது. இதனால் பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டுக்கு உறுதிச் செய்யப்பட்டு வருகின்றன. விநியோகஸ்தர்கள் பலரும் இவ்வளவு படம் எப்படி தாங்கும் என முணுமுணுத்து வருகிறார்கள்.

‘கேம் சேஞ்சர்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘வணங்கான்’, ‘டென் ஹவர்ஸ்’, ‘படை தலைவன்’, ‘சுமோ’, ‘தருணம்’, ‘மெட்ராஸ்காரன்’, ‘2கே லவ் ஸ்டோரி’, ‘ப்ரீடம்’ உள்ளிட்ட படங்கள் பொங்கல் வெளியீட்டுக்கு திட்டமிடப்படுகின்றன. இதில் சில படங்கள் அதிகாரபூர்வமாகவே தேதியினை அறிவித்துவிட்டார்கள். சில படங்கள் ஜனவரி 10-ம் தேதிக்கும், சில படங்கள் ஜனவரி 14-ம் தேதிக்கும் திட்டமிட்டு வருகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow