‘பாஸ்பால்’ அதிரடி வெற்றியை நோக்கும் இங்கிலாந்தை தடுக்குமா இந்தியா?
ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டி 5-ம் நாள் வரை வந்து த்ரில் போட்டியாக அமைந்திருப்பது டெஸ்ட் போட்டிக்கான நல்ல ஊக்குவிப்பாகும்.

ஹெட்டிங்லி டெஸ்ட் போட்டி 5-ம் நாள் வரை வந்து த்ரில் போட்டியாக அமைந்திருப்பது டெஸ்ட் போட்டிக்கான நல்ல ஊக்குவிப்பாகும். ஆனால், இந்திய அணி இந்தப் போட்டியைத் தோற்கும் என்ற நிலையே இப்போதைக்கு ஹெட்டிங்லி பிட்ச் பற்றிய கணிப்பில் தெரிய வருகிறது. மேலும் 4-வது இன்னிங்ஸில் எவ்வளவு பெரிய இலக்கானாலும் விரட்டுவோம் என்பதில் இங்கிலாந்தின் புதிய பாஸ்பால் அணுகுமுறை உத்தரவாதமாக உள்ளது.
இந்திய அணியின் பந்து வீச்சும் பும்ராவைத் தாண்டி எந்த ஒரு சாராம்சமும் இல்லாமல் சொத்தையாக உள்ளது. நல்ல துணை ஸ்பின்னர் இல்லை. ஜடேஜா பவுலிங்கை மறந்து விட்டார். கொஞ்சம் பேட்டிங்கையும் பீல்டிங்கையும் மறந்து வருகிறார். அவரைத் தூக்கி விட்டு வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுப்பது நல்லது. தொடர்ந்து குல்தீப் யாதவும் ஒழிக்கப்பட்டு வருகிறார்.
What's Your Reaction?