பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு

பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த 'நியூயார்க் பிரகடனத்தை' ஆதரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.

Sep 13, 2025 - 12:35
 0  3
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு

புதுடெல்லி: பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த 'நியூயார்க் பிரகடனத்தை' ஆதரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.

பிரான்ஸ் அறிமுகப்படுத்திய இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்தன, எதிராக 10 நாடுகள் வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிக்கவில்லை. இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்களில் அர்ஜென்டினா, ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow