அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை கைவிட ஈரான் திட்டம்: அணு ஆயுதப் போர் மூளும் அச்சமா?
ஈரான் நாடாளுமன்றம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறுவதற்கான மசோதாவைத் தயாரித்து வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அணு ஆயுதப் போர் மூளுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

தெஹ்ரான்: ஈரான் நாடாளுமன்றம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறுவதற்கான மசோதாவைத் தயாரித்து வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அணு ஆயுதப் போர் மூளுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறும்போது, அந்நாடு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறக்கூடும். அதே நேரத்தில் அமைதியான அணுசக்திக்கான அதன் உரிமையை நிலைநிறுத்த உறுதியுடன் உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், “ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க விரும்பவில்லை. ஆனால், அணுசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கான அதன் உரிமையைப் பின்பற்றும். பேரழிவு ஆயுதங்களுக்கு எதிரான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மத ஆணையை பின்பற்றுவோம்” என்றார்.
What's Your Reaction?