‘தேவரா 2’ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜூனியர் என்.டி.ஆர்
‘தேவரா 2’ தொடங்கப்படாது என்ற வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான படம் ‘தேவரா’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை

‘தேவரா 2’ தொடங்கப்படாது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான படம் ‘தேவரா’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. அதே வேளையில் இப்படத்தின் கதை இன்னும் முடியவில்லை, 2-ம் பாகம் இருக்கிறது. தற்போது இப்படம் தொடங்கப்படாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஏனென்றால் பிரசாந்த் நீல் படத்தை முடித்தவுடன், நெல்சன் இயக்கும் படம் மற்றும் த்ரிவிக்ரம் இயக்கும் படம் என்று முடிவு செய்திருக்கிறார். இதனால் ‘தேவரா 2’ படம் கைவிடப்பட்டதாக தெலுங்கு ஊடகங்கள் பலரும் குறிப்பிட்டு இருந்தார்கள். இதனிடையே ‘தேவரா’ படத்தின் இயக்குநர் கொரட்டலா சிவாவுக்கு இன்று பிறந்த நாள்.
What's Your Reaction?