50% வரி விதிப்பு இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது: டொனால்டு ட்ரம்ப்
இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது என்றும், உக்ரைன் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது என்றும், உக்ரைன் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த டொனால்டு ட்ரம்ப், "செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், “உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவது எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். சமரசம் ஏற்பட வேண்டுமானால் இரு தரப்புக்கும் அதில் ஒரே நேரத்தில் ஆர்வம் இருக்க வேண்டும். புதினுக்கு ஆர்வம் இருக்கும்போது ஜெலன்ஸ்கிக்கு இல்லை. ஜெலன்ஸ்கிக்கு இருக்கும்போது புடினுக்கு இல்லை.
What's Your Reaction?