பாடகர் ஜெயச்​சந்​திரன் மறைவுக்கு ஆளுநர், தலைவர்கள் இரங்கல்

திரைப்பட பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Jan 11, 2025 - 09:55
 0  4
பாடகர் ஜெயச்​சந்​திரன் மறைவுக்கு ஆளுநர், தலைவர்கள் இரங்கல்

சென்னை: திரைப்பட பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: பாடகர் பி.ஜெயச்சந்திரனின் மறைவு, இசை உலகில் ஓர் ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குரல் அதன் ஆழம் மற்றும் உணர்ச்சியால் இதயங்களைத் தொட்டு பல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரங்களைக் கடந்து ஒலித்தது. ஒவ்வொரு மெட்டுக்கும் உயிர்க் கொடுத்து பாடலைக் கேட்ட எண்ணற்றோருடன் அவர் நீடித்த தொடர்பை உருவாக்கினார். அவரது காலத்தால் அழியாத பாடல்கள் பல தலைமுறைகளைக் கடந்து எதிரொலிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow