பாஜகவுக்கு வேதாந்தா வழங்கிய நன்கொடை 4 மடங்காக உயர்வு

மும்​பையை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் வேதாந்தா நிறுவனம் சுரங்க தொழிலில் கோலோச்சி வரு​கிறது.

Jul 14, 2025 - 07:05
 0  4
பாஜகவுக்கு வேதாந்தா வழங்கிய நன்கொடை 4 மடங்காக உயர்வு

புதுடெல்லி: மும்​பையை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் வேதாந்தா நிறுவனம் சுரங்க தொழிலில் கோலோச்சி வரு​கிறது. அந்த நிறு​வனம் சார்​பில் கோவா, கர்​நாட​கா உட்பட பல மாநிலங்கள் மற்றும் லைபீரியா உள்​ளிட்ட வெளி​நாடு​களி​லும் சுரங்​கங்​கள் உள்​ளன.

இந்த சூழலில் 2024-25-ம் நிதி​யாண்​டில் பல்​வேறு கட்​சிகளுக்கு வழங்​கிய நன்​கொடை விவரங்​களை வேதாந்தா நிறுவனம் வெளி​யிட்டு இருக்​கிறது. இதன்​படி அந்த நிறு​வனம் சார்​பில் பாஜக​வுக்கு ரூ.97 கோடி நன்​கொடை வழங்​கப்​பட்டு உள்​ளது. அதற்கு முந்​தைய ஆண்டு பாஜக​வுக்கு ரூ.26 கோடி மட்​டுமே நன்​கொடை​யாக வழங்​கப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow