பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பிப்.11-ல் தேரோட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று (பிப்.5) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்.11-ம் தேதி மாலை  நடைபெற உள்ளது.

Feb 5, 2025 - 13:50
 0  5
பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பிப்.11-ல் தேரோட்டம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று (பிப்.5) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்.11-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா புதன்கிழமை (பிப்.5) காலை 10.50 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, சுவாமி, கொடிமரம் மற்றும் கொடி ஆகியவற்றுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வேல், மயில், சேவல் இடம் பெற்ற கொடியேற்றப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow