திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Nov 29, 2024 - 09:55
 0  4
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதி: பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உற்சவரான பத்மாவதி தாயார் நேற்று காலை மேள தாளங்களுடன் கொடிமரம் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். பின்னர், வேத பண்டிதர்களால் வேதங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் பிரம்மோற்சவ கொடி தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow