பண்டிகை கால கார் விற்பனை மந்தம்: ரூ.79,000 கோடிக்கு வாகனங்கள் தேக்கம்
பண்டிகை கால கார் விற்பனை இந்தாண்டு மந்த நிலையில் இருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி: பண்டிகை கால கார் விற்பனை இந்தாண்டு மந்த நிலையில் இருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி கார் விற்பனையானது எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மந்தநிலையில் உள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் முதலே கார் விற்பனை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் விலையுள்ள கார் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. கரோனா பேரிடருக்குப் பிறகு விற்பனை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இப்பிரிவின் பங்களிப்பானது மிக முக்கியமானதாக உள்ளது.
What's Your Reaction?