இந்தியாவில் வறுமை விகிதம் 4.6 சதவீதமாக சரிவு: எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டில் நாட்டின் வறுமை விகிதம் 4.6 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக எஸ்பிஐ-யின் மதிப்பீட்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jun 11, 2025 - 01:55
 0  2
இந்தியாவில் வறுமை விகிதம் 4.6 சதவீதமாக சரிவு: எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டில் நாட்டின் வறுமை விகிதம் 4.6 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக எஸ்பிஐ-யின் மதிப்பீட்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2023-ம் ஆண்டில் வறுமை விகிதம் 5.3 சதவீதமாக இருந்தது என உலக வங்கி மதிப்பீடு செய்திருந்தது. இந்த நிலையில் 2024-ல் வறுமை விகிதம் அதனுடன் ஒப்பிடுகையில் 4.6 சதவீதமாக கணிசமாக குறைந்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow