“பணவீக்கத்தை விட அமெரிக்க வரியின் தாக்கமே அதிக கவலை அளிக்கிறது” - ரிசர்வ் வங்கி ஆளுநர்
பணவீக்கத்தை விட பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்க வரிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தான் அதிக கவலை கொண்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

மும்பை: பணவீக்கத்தை விட பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்க வரிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தான் அதிக கவலை கொண்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று 6% ஆக குறைத்தது. ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 7ம் தேதி 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களில் அது மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டுள்ளது.
What's Your Reaction?