பங்குனி திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு, 11-ம் நாளான நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது. 12-ம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் புறப்பாடாயினர்.
What's Your Reaction?