‘நோ செக்ஸ், மேரேஜ், கிட்ஸ்...’ - ட்ரம்ப் வெற்றியால் அமெரிக்காவில் வலுக்கும் ‘4பி இயக்கம்’
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றி அங்குள்ள பெண்கள் பலருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், ட்ரம்பின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்கப் பெண்களில் பலரும் தென்கொரியாவின் ‘4 பி’ இயக்கத்தில் இணைவதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இப்போது ‘4பி) இயக்கம் வலுத்துள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றி அங்குள்ள பெண்கள் பலருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், ட்ரம்பின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்கப் பெண்களில் பலரும் தென்கொரியாவின் ‘4பி’ இயக்கத்தில் இணைவதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இப்போது '4பி இயக்கம்' வலுத்துள்ளது.
செக்ஸ், டேட்டிங், திருமணம், குழந்தை என நான்கு விஷயங்களுக்கு பெண்கள் நோ சொல்லும் இந்த 4பி இயக்கம் (4B movement) ட்ரம்பின் வெற்றிக்குப் பின் இணையத்திலும் எழுச்சி கண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் வெற்றி ஆண் வாக்களார்களால் நடந்துள்ளது என்றும், அது தங்களின் இனப்பெருக்க உரிமை மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பு என்றும் பல அமெரிக்க பெண்கள் நம்புகின்றனர். இளம் அமெரிக்கப் பெண்கள் பலரும் ஆண்களைப் புறக்கணிப்பது பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். இதற்காக தென்கொரியாவின் பெண்கள் போராட்டாமான 4பி இயக்கத்தை அமெரிக்கப் பெண்கள் நாடத் தொடங்கியுள்ளனர். இது ஆண்களைப் புறக்கணிக்கும் போராட்டமாகும். தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல அமெரிக்கப் பெண்கள் 4பி இயக்கத்தில் இணைவதாக அறிவித்துள்ளனர்.
What's Your Reaction?