அமெரிக்காவில் ஆய்வகத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்: தேடும் பணி தீவிரம்

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள ஆய்வகத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீஸார் அந்த பணியை கவனித்து வருகின்றனர். 

Nov 11, 2024 - 15:45
 0  3
அமெரிக்காவில் ஆய்வகத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்: தேடும் பணி தீவிரம்

யெமஸ்ஸி: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள ஆய்வகத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீஸார் அந்த பணியை கவனித்து வருகின்றனர்.

ரீசஸ் மக்காக் (செம்முகக் குரங்கு) இன குரங்குகளை கொண்டு அங்குள்ள ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனம் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் அந்த ஆய்வகத்தில் உள்ள குரங்குகளின் 50 குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டை திறந்தநிலையில் விட்டுள்ளார் அதன் பராமரிப்பாளர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow