பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல்: 16 வீரர்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

குவெட்டா: பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகநீண்ட காலமாக ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சூழலில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறிவைத்து நேற்று காலை தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.
What's Your Reaction?